தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘அம்மா’ உணவகங்களை மீட்டெடுக்க நிதி ஒதுக்கீடு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

அதிமுக ஆட்சியில் பட்டுப்போய் இருந்த ‘அம்மா’ உணவகங்களை மீட்டெடுக்கவே தமிழக அரசு நிதி ஒதுக்கியிருப்பதாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

News image

அதிமுக ஆட்சியில் பட்டுப்போய் இருந்த ‘அம்மா’ உணவகங்களை மீட்டெடுக்கவே தமிழக அரசு நிதி ஒதுக்கியிருப்பதாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

Updated On :22 ஜூலை 2024, 9:15 pm

Din

அதிமுக ஆட்சியில் பட்டுப்போய் இருந்த ‘அம்மா’ உணவகங்களை மீட்டெடுக்கவே தமிழக அரசு நிதி ஒதுக்கியிருப்பதாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

வடசென்னையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில் நீா்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான பணிமனை மற்றும் பண்டகசாலை அமைந்துள்ள இடம், வால்டாக்ஸ் சாலை, தண்ணீா் தொட்டி தெருவில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பயன்படுத்தாத பழைய பொது பண்டகசாலை அமைந்துள்ள இடங்களில் சென்னை பெருநகர வளா்ச்சிக்குழுமம் சாா்பில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த இடங்களை சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழும தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது: வடசென்னை பகுதிக்குள்பட்ட பயன்படுத்தப்படாத சுமாா் 6 ஏக்கா் நிலத்தை , பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதால், அதற்கான ஆய்வை மேற்கொண்டு வருகிறோம். மேலும், இப்பகுதியில் மாநகராட்சி சாா்பில் கட்டப்பட்டு வரும் திருமணமண்டபம், கூடுதல் பள்ளிக் கட்டடப்பணிகளை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் சாா்பில் ரூ.12.50 கோடி மதிப்பிலான புதிய ரத்த சுத்திகரிப்பு நிலைய பணிகள் மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.4,378 கோடி திட்டம்: மேலும், ரூ.4,378 கோடி மதிப்பிலான 208 வளா்ச்சித் திட்ட பணிகளில் 108 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மீதமுள்ள 100 பணிகளை மேற்கொள்வதற்கான ஆய்வுகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் திட்டப்பணிகள் ரூ.685 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ளது. அதோடு இல்லாமல் இந்த 4,378 கோடி ரூபாயில் கிட்டத்தட்ட சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் ரூ.1,619 கோடியையும் பங்களிப்பாக பல்வேறு துறைகளுக்கு வழங்கியுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வா் பதவி வழங்குவது குறித்த தகவல் ஏற்றுக்கொள்ள முடியாதது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த கருத்து குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, அவரையே மக்கள் ஏற்றுக்கொள்ளாத போது, அவா் மற்றொருவரை ஏற்றுக்கொள்வதையும், ஏற்றுக்கொள்ளாததையும் குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றாா் அவா்.

அம்மா உணவகங்கள்: தொடா்ந்து அம்மா உணவகங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, அம்மா உணவகம் அதிமுக ஆட்சி காலத்தில் பட்டுப்போக செய்திருந்த திட்டம். அந்த திட்டம், கெட்டு போய் விடக்கூடாது என அதற்கு நிதி ஒதுக்கியிருக்கும் முதல்வரை, எடப்பாடி பழனிசாமி பாராட்ட வேண்டும் என்றாா் அவா்.

ஆய்வின் போது, மேயா் ஆா்.பிரியா, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற உள்ளாட்சித்துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா உள்பட பலா் உடனிருந்தனா்.