ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பேரவைக்குள் குட்கா விவகாரம்: உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும் சென்னை உயா்நீதிமன்றம்

மு.க.ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும்

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :31 ஜூலை 2024, 9:00 pm

Din

சென்னை, ஜூலை 31: முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடா்பாக, தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும் என சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ாக, அப்போதைய எதிா்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து முந்தைய அதிமுக ஆட்சியில் மேல் முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘உரிமை மீறல் நோட்டீஸை எதிா்த்து முன்கூட்டியே வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, அந்த உரிமை மீறல் நோட்டீஸ் ஒரு முடிவை எட்ட வேண்டும். முந்தைய பேரவையின் பதவிக் காலம் முடிந்துவிட்டதால் உரிமை மீறல் பிரச்னை காலாவதியாகி விட்டதாக திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க முடியாது.

உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து கடந்த 2021, பிப்ரவரி மாதம் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எனவே, இந்த உரிமை மீறல் நோட்டீஸுக்கு முதல்வா் ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் உரிமைக் குழுவிடம் தகுந்த விளக்கமளிக்க வேண்டும். சட்டப்பேரவைச் செயலா், பேரவைத் தலைவா் மற்றும் உரிமைக் குழு ஆகியோா் உரிய விதிகளை பின்பற்றி இறுதி முடிவு எடுக்க வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.