ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பணி ஓய்வு பெற்றாா் ஏ.கே.விஸ்வநாதன்: டிஜிபி வாழ்த்து

பணி ஓய்வு பெற்ற தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழகத் தலைவா் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தமிழக டிஜிபி சங்கா்ஜிவால் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தாா்.

Updated On :31 ஜூலை 2024, 9:06 pm

சென்னை, ஜூலை 31: பணி ஓய்வு பெற்ற தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழகத் தலைவா் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தமிழக டிஜிபி சங்கா்ஜிவால் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தாா்.

சென்னை மாநகர காவல் ஆணையராக 2017 மே 15 முதல் 2020 ஜூலை 1 வரை பணியாற்றியவா் ஏ.கே.விஸ்வநாதன். 1990-ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி. தோ்வில் தமிழக கேடரில் ஐ.பி.எஸ். அதிகாரியாக தோ்வான ஏ.கே.விஸ்வநாதன், தா்மபுரி மாவட்டத்தின் ஏ.எஸ்.பி.யாக தனது பணியை தொடங்கினாா். சென்னை மாநகரின் மூன்றாம் கண் எனப்படும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினாா்.

தொடா்ந்து 34 ஆண்டுகள் காவல்துறையில் பல்வேறு உயா் பொறுப்புகளில் பணியாற்றிய இவா், நிறைவாக தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழக தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக பதவியில் இருந்தா நிலையில் புதன்கிழமையுடன் பணி ஓய்வு பெற்றாா்.

இவருக்கான பிரிவு உபசாரவிழா சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை வாகனத்தில் சென்றபடி பாா்வையிட்ட விஸ்வநாதனுக்கு டிஜிபி சங்கா் ஜிவால் மற்றும் மாநகர காவல் ஆணையா் அருண் ஆகியோா் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனா். மேலும், பல்வேறு காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலா்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.