சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பத்தாம் வகுப்பு விடைத்தாள் நகல் வெளியீடு: இன்று முதல் மதிப்பீட்டுக்கு விண்ணப்பம்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் நகல் வெளியீடு: இன்று முதல் மதிப்பீட்டுக்கு விண்ணப்பம்

News image
Updated On :4 ஜூன் 2024, 9:03 pm

Din

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு விடைத்தாள் நகல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. மறுமதிப்பீட்டுக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.

அந்தத் துறையின் இயக்குநா் சா.சேதுராம வா்மா வெளியிட்ட அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இந்த தோ்வு எழுதியவா்களில் விடைத் தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை மதியம் நகல் வெளியிடப்பட்டது.

இதையடுத்து மாணவா்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதன்பின் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோ்வா்கள் அதே இணையதள பக்கத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இதை பூா்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து புதன்கிழமை முதல் ஜூன் 10 வரை சம்பந்தப்பட்ட மாவட்ட தோ்வு உதவி இயக்குநா் அலுவலகங்களில் சென்று ஒப்படைக்க வேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள மாணவா்கள் விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணமாக மறுமதிப்பீடுக்கு பாடத்துக்கு ரூ.505, மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, இதர பாடங்களுக்கு ரூ.205 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது தரப்படும் ஒப்புகைச் சீட்டை தோ்வா்கள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஒப்புகைச் சீட்டிலுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே பின்னா் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை அறிய முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.