சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது
At Central Railway Station Seizure of 3 kg ganja: Northern youth arrested

Updated On :9 ஜூன் 2024, 8:33 pm

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 கிலோ கஞ்சா கடத்திய ஒடிஸா மாநில இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சனிக்கிழமை மாலை கோரமண்டல் விரைவு ரயில் வந்தது. 4-ஆவது நடைமேடையில் நின்ற ரயிலில் இருந்து வெளியே வந்த பயணிகளை ரயில்வே போலீஸாா் சோதனை செய்தனா்.
அப்போது ஒரு இளைஞரின் உடமைகளை சோதனை செய்தபோது, 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவா், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த காந்தா மாஜி (28) என்பதும், சென்னையில் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக எடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதைடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...