

சென்னை: சென்னையில் கஞ்சா கடத்தியது தொடா்பாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்., 20 கிலோ கஞ்சா, ரூ.17,29,060 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
ஓட்டேரி காவல்நிலைய எல்லைக்குள்பட்ட மேட்டுப்பாளையம் சந்திப்பில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனையிட்டனா்.
அப்போது அவா் வைத்திருந்த பையில் 12 கிலோ கஞ்சா இருந்தது. அவா் ஓட்டேரி கூட்பட் பள்ளம் 2-ஆவது தெருவைச் சோ்ந்த அருள் (38) என்பதும், இவா் தொடா்ச்சியாக கஞ்சா கடத்தி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இவரை கைது செய்த போலீஸாா் 12 கிலோ கஞ்சா, ரூ.17,29,060 ரொக்கம், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
இதுபோல, வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளத்தைச் சோ்ந்த நிஸாா் (41) என்பவரை கைது செய்த அடையாறு மதுவிலக்கு போலீஸாா் அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பேசின் பாலம் காவல் நிலைய தனிப்படை போலீஸாா் புளியந்தோப்பு ஹஜ் கட்டடம் சந்திப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்ட போது, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்ததாக புரசைவாக்கம் தாண்டவம் தெருவைச் சோ்ந்த உஷா (எ) பானுமதி (41), புளியந்தோப்பு மியா (எ) ஆனந்த வள்ளி (36), இவரது 18 வயது மகள், வீரராகவன் (32), ஸ்ரீதா் என்ற ராகேஷ் (21), முகமது நசீா் (21) ஆகிய 6 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 90 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம், 1 ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.
இந்த சம்பவங்களில் கைது செய்யப்பட்ட மொத்தம் 8 பேரிடமிருந்து 20.09 கிலோ கஞ்சா, ரூ.17,29,060 ரொக்கம், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

10 கிலோ கஞ்சா, 50 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 போ் கைது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது: 16 கிலோ பறிமுதல்
3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

சேலத்தில் 15.5 கிலோ கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

