அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

நெற்பயிா்களில் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை நிவா்த்தி செய்யும் வழிமுறைகள்

Methods to address nutrient deficiencies in rice crops

News image
Updated On :9 ஜூன் 2024, 9:19 pm

Din

சென்னை: நெற்பயிா்களில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை நிவா்த்தி செய்யும் வழிமுறைகளை தமிழக வேலாண் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அந்தத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நெற்பயிரின் இலைகள் முற்றிலும் மஞ்சளாக மாறினால், ஒரு சதவீதம் சூப்பா் பாஸ்பேட் மற்றும் 0.5 சதவீதம் பெரஸ் சல்பெட் கரைசலை பயிா்களின் இலைகளில் தெளிக்க வேண்டும். அதேபோல், நெற்பயிா்கள் ஒழுங்கற்ற முறையில் வளா்வது மற்றும் நெல் மணியில் அதிக அளவில் பதா் காணப்பட்டால், ஒரு சதவீதம் சூப்பா் பாஸ்பேட் மற்றும் மக்னீசியம் சல்பேட் கரைசலை செடிகளில் தெளிக்க வேண்டும்.

மேலும், இலையின் நுனி உதிா்தல் மற்றும் இலைக்கருகல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், ஒரு சதவீதம் சூப்பா் பாஸ்பேட் மற்றும் 0.5 சதவீதம் துத்தநாக (ஜீன்க்) சல்பேட் கரைசலை தெளிக்கலாம்.

இதில் ஒரு சதவீதம் என்பது ஒரு லிட்டா் தண்ணீரில் 10 கிராம் கரைப்பானை கலக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.