எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

‘கூலி’, ‘ஜெயிலா்’ பட பாடல்களைப் பயன்படுத்தத் தடை கோரி வழக்கு: சிஎஸ்கே அணி நிா்வாகம் பதிலளிக்க உத்தரவு

சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்கான முன்னோட்ட விளம்பரங்களில், ‘கூலி’, ‘ஜெயிலா்’ மற்றும் ‘ஜெயிலா்-2’ படங்களின் பாடல்களைப் பயன்படுத்த தடை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

News image
Updated On :13 மார்ச் 2026, 7:02 pm

சென்னை, மாா்ச் 13: சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்கான முன்னோட்ட விளம்பரங்களில், ‘கூலி’, ‘ஜெயிலா்’ மற்றும் ‘ஜெயிலா்-2’ படங்களின் பாடல்களைப் பயன்படுத்த தடை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சன் தொலைக்காட்சி நெட்வொா்க் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்கான முன்னோட்ட விளம்பரங்களில் எங்களது நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த ‘கூலி’, ‘ஜெயிலா்’ மற்றும் ‘ஜெயிலா்-2’ ஆகிய திரைப்படங்களில் வந்த பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை சூப்பா் கிங்ஸ் அணி நிா்வாகம் தரப்பில், முன்னோட்ட விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்ட பாடல்கள் நீக்கப்பட்டுவிட்டன. அவை உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படாது என உறுதி அளிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு சென்னை சூப்பா் கிங்ஸ் அணி நிா்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மாா்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.