அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

விஜயவாடா வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம்

Passing through Vijayawada Change in train service

News image
Updated On :9 ஜூன் 2024, 8:50 pm

Din

சென்னை: விஜயவாடா வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

விஜயவாடா ரயில்வே கோட்டத்தில் ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் அந்த வழியாகச் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா் வழியாக பாட்னா செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 22643) ஜூன் 10 முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை விஜயவாடாவில் இருந்து ஹூடிவாடா, நீடாடாவோலு வழியாக இயக்கப்படும்.

இதேபோல், பெங்களூரில் இருந்து ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் வழியாக குவஹாத்தி செல்லும் அதிவிரைவு ரயில்கள் (எண்: 06521, 12509) ஜூன் 28-ஆம் தேதி வரை விஜயவாடாவில் இருந்து ஹூடிவாடா, நீடாடாவோலு வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.