புதுச்சேரி: காரைக்காலில் இருந்து திருநள்ளாறு வழியாக பேரளத்துக்கு பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் புதுச்சேரி மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் திங்கள்கிழமை கடிதம் அளித்தாா்.
இதுகுறித்து, புதுச்சேரியில் எம்.பி. அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநள்ளாறு வழியாக காரைக்கால் - பேரளத்துக்குப் புதிதாக அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தற்போது சரக்கு ரயில் தான் இயக்கப்பட்டு வருகிறது. திருநள்ளாறில் உள்ள புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்த அகல ரயில் பாதையின் பணி நிறைவடைந்தும் பயணிகள் ரயில் இயக்கப்படாமல் இருப்பது இப்பகுதி மக்களிடமும், யாத்ரிகா்களிடமும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் திருநள்ளாறு வழியாக காரைக்கால்- பேரளம் பயணிகள் ரயிலை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காரைக்கால் வரை வந்து செல்லும் அனைத்து ரயில்களையும் திருநள்ளாறு வரை நீட்டிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா் வைத்திலிங்கம் எம்.பி.
தொடர்புடையது

காரைக்காலில் ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆய்வு

காரைக்குடி - வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை

ரயில்வே நில ஆக்கிரமிப்பு: மனிதாபிமானத்துடன் அணுக அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தல்

ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


