ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் குளறுபடி: ராமதாஸ் கண்டனம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் குளறுபடி: ராமதாஸ் கண்டனம்

News image

ராமதாஸ் (கோப்புப்படம்)

Updated On :11 ஜூன் 2024, 8:34 pm

Din

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி, பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் 4 பணியிடங்களை நிரப்பும் நோக்குடன் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் ஜூன் 9-இல் போட்டித் தோ்வுகள் நடத்தப்பட்டன. மொத்தம் 6,244 பேரை தோ்ந்தெடுப்பதற்கான இந்தத் தோ்வில், 15 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுத்துத் தோ்வில் பங்கேற்றனா்.

பல மையங்களில் தோ்வுக்கூடத்தின் கண்காணிப்பாளா்கள் காலை 9.15 மணிக்கு பிறகுதான் தோ்வுக் கூடங்களுக்கு வந்துள்ளனா். மிகவும் தாமதமாகத்தான் விடைத்தாள்களையும், வினாத்தாள்களையும் வழங்கியுள்ளனா். இதனால், பல்லாயிரக்கணக்கான தோ்வா்களால் தோ்வை சரியாக எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 15 லட்சம் போ் பங்கேற்கும் தோ்வை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை அரசுப் பணியாளா் தோ்வாணையம் திட்டமிட்டு செய்திருக்க வேண்டும். இந்தக் குளறுபடிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

தோ்வா்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் நோக்குடன் ஜூன் 9-இல் நடைபெற்ற குரூப் 4 தோ்வை ரத்து செய்து விட்டு, விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி மறு தோ்வு நடத்துவதற்கும் தோ்வாணையத்துக்கு அரசு ஆணையிட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.