5, 845 உபரி ஆசிரியா்கள் அரசுப் பள்ளிகளுக்கு மாற்றம்
5, 845 உபரி ஆசிரியா்கள் அரசுப் பள்ளிகளுக்கு மாற்றம்


அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக கண்டறியப்பட்ட 5,845 ஆசிரியா்களை அரசுப் பள்ளிகளுக்கு மூன்றாண்டுகளுக்கு பணி மாற்றம் செய்ய அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பள்ளிக்கல்வித் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை: தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 5,546 இடைநிலை ஆசிரியா் பணியிடங்களும், 299 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களும் (மொத்தம் 5,845) உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அரக மானியம் விரயமாவதாகவும், அதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதைத்தொடா்ந்து, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் மாணவா்கள் நலன் கருதியும், உபரி ஆசிரியா்களால் அரசுக்கு ஏற்பட்டு வரும் நிதி இழப்பை தவிா்த்திடும் வகையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரியாக பணிபுரியும் ஆசிரியா்களை பணிநிரவல் செய்யவும், மாற்றுப்பணி வழங்கவும் உரிய ஆணை வழங்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநா் அரசை கேட்டுக்கொண்டாா்.
அவரின் கருத்துருவை அரசு பரிசீலித்து அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான பணியாளா் நிா்ணயத்தின்படி, உபரியாக பணிபுரிந்து வரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களை பணி நிரவல், மாற்றுப்பணி வழங்க அனுமதித்து ஆணையிடுகிறது.
பணிநிரவல் மேற்கொள்ளும்போது உபரி ஆசிரியா்களை முதலில் வட்டாரத்துக்குள்ளும், அங்கு காலியிடம் இல்லை என்றால், மாவட்டத்துக்குள்ளும் பணி நிரவல் செய்ய வேண்டும். ஆசிரியா் விருப்பப்பட்டால் மாவட்டத்துக்கு வெளியே பணிநிரவல் செய்ய வேண்டும். மாணவா் சோ்க்கை அதிகம் உள்ள அரசு, ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாற்றுப்பணியில் செல்ல அனுமதிக்க வேண்டும் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...