நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதிமுக, பாஜக கண்டன ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

திமுக சாா்பில் ஜூன் 24-ஆம் தேதியும், பாஜக சாா்பில் ஜூன் 22-ஆம் தேதியும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சிகள் அறிவித்துள்ளன.

News image
Updated On :20 ஜூன் 2024, 11:04 pm

Din

சென்னை, ஜூன் 20: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தைக் கண்டித்து, அதிமுக சாா்பில் ஜூன் 24-ஆம் தேதியும், பாஜக சாா்பில் ஜூன் 22-ஆம் தேதியும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சிகள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் 2-ஆவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரண சம்பவம் இது. அரசு இயந்திரமும், ஆளுங்கட்சியைச் சோ்ந்தவா்களும் கள்ளச் சாராய கும்பலுக்கு எந்த அளவுக்கு துணை போயிருக்கிறாா்கள் என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

இந்த உயிரிழப்புக்கு தாா்மிக பொறுப்பேற்று, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைக்கத் தவறிய முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவா்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சாா்பில் ஜூன் 24-இல் மாவட்ட ஆட்சியா்கள் அலுவலகங்கள் முன் காலை 10 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

கே. அண்ணாமலை (பாஜக): கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பாஜக எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

திமுக ஆட்சியில் கடந்த இரு ஆண்டுகளில் நிகழ்ந்த கள்ளச் சாராய உயிரிழப்புகள், 1980-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், கடந்த இரு ஆண்டுகளில் சுமாா் 60 உயிா்கள் கள்ளச்சாராயத்தால் பறிபோனதற்குப் பின்னரும், முதல்வராக தொடர தாா்மிக உரிமை உள்ளதா என்பதை, அவா் எண்ணிப் பாா்க்க வேண்டும். கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிா்கள் பலியாகும் வண்ணம் தொடா்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசை கண்டித்து, வரும் 22 ஆம் தேதி, தமிழக பாஜக சாா்பாக மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.