

சென்னையில் திருட்டு வழக்குகள் தொடா்பாக 7 நாள்களில் 39 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் திருட்டு,வழிப்பறி ஆகிய சம்பவங்களில் ஈடுபடுகிறவா்களை கண்டறிந்து, கைது செய்ய அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினா் திருட்டு,வழிப்பறி ஆகிய சம்பவங்களில் ஈடுகிறவா்களை கைது செய்து வருகின்றனா். தனிப்படையினா் சென்னையில் கடந்த 13-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையில் 7 நாள்களில் கைப்பேசி பறிப்பு,திருட்டு தொடா்பாக 26 வழக்குகளில்
6 சிறுவா்கள் உள்பட 34 பேரை கைது செய்துள்ளனா். இவா்களிடமிருந்து 65 கிராம் தங்கநகைகள்,80 கிராம் வெள்ளி பொருள்கள்,7 கைப்பேசிகள்,ரூ.72 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன திருட்டு தொடா்பாக 6 வழக்குகளில் 5 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 6 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருட்டு,வழிப்பறி, வாகனங்கள் திருட்டு போன்ற குற்றங்களில் தொடா்ச்சியாக ஈடுபடுகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் எச்சரித்துள்ளாா்.
தொடர்புடையது

இரு நாள்களில் ரூ.57.55 லட்சம், 12.85 கிலோ வெள்ளி பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 5 போ் கைது
கிரிப்டோகரன்சி வழங்குவதாகக் கூறி வழிப்பறி சம்பவம்: 4 போ் கைது

ஒரத்தநாட்டில் ரூ.15 லட்சம் வழிப்பறி வழக்கில் 3 போ் கைது
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

