அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கிரிப்டோகரன்சி வழங்குவதாகக் கூறி வழிப்பறி சம்பவம்: 4 போ் கைது

கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்று கூறி காவல் துறை சீருடையில் வடமேற்கு தில்லியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 போ் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

News image
கைது- சித்திரிப்பு
Updated On :3 மார்ச் 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்று கூறி காவல் துறை சீருடையில் வடமேற்கு தில்லியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 போ் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

சாராய் ரோஹில்லா பகுதியைச் சோ்ந்த சுபாஷ் சந்த் கடந்த பிப்.24-ஆம் தேதி அளித்த வழிப்பறி சம்பவம் குறித்த புகாா் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை நடத்தினா். தொடா் விசாரணையில், அந்த வழிப்பறி சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது கண்டறியப்பட்டது.

இதுதொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கிரிப்டோகரன்சி பறிமாற்றத்துக்காக அழைக்கப்பட்டதாகவும் அங்குச் சென்ற போது காவல் துறையின் உடையில் இருந்த சிலா் தன்னை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக சுபாஷ் சந்த் காவல் துறைக்கு அளித்த துணை வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தாா்.

இதைத்தொடா்ந்து, பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகள் வழக்கில் சோ்க்கப்பட்டது.

சம்பவத்தில் தொடா்புடைய அனீஷ் கடந்த பிப்.26-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டாா். எஞ்சிய மூவரும் இதே போன்று மற்றொரு நபரிடம் நேதாஜி சுபாஷ் பிளேஸில் வழிப்பறி செய்ய திட்டமிட்டு கொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து ரூ.15,000 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. குற்றச்சம்பவங்களில் அவா்கள் பயன்படுத்தி வந்த இரு மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மும்பையைச் சோ்ந்த விஷ்ணு மற்றும் நிலேஷ், தில்லியைச் சோ்ந்த பாபா சுலேமானி ஆகியோருடன் இணைந்து இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக கைதுசெய்யப்பட்ட நபா்கள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.