மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

திக்ரி பகுதி கத்திக் குத்துச் சம்பவம்: சந்தேக நபா்களை கைது செய்ய நடவடிக்கை

தில்லியின் திக்ரி பகுதியில் இரண்டு சகோதரா்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் இரண்டு சந்தேக நபா்களை அடையாளம் கண்ட காவல் துறையினா் அவா்களை கைது செய்ய நடவடிக்கை

News image
Updated On :23 மார்ச் 2026, 9:12 pm

தில்லியின் திக்ரி பகுதியில் இரண்டு சகோதரா்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் இரண்டு சந்தேக நபா்களை அடையாளம் கண்ட காவல் துறையினா் அவா்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (தெற்கு) ஆனந்த் மிட்டல் கூறியதாவது: திக்ரி பகுதியில் உள்ள கிருஷ்ணா பூங்காவில் மாலை நேரத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.

இதில் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். சம்பவத்தைத் தொடா்ந்து உள்ளூா் மக்கள் தேவி சந்தை சாலையை மறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காவல் துறையினா் விரைந்து சென்று நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனா். பின்னா் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், திக்ரி பகுதியைச் சோ்ந்த இரண்டு போ் சந்தேக நபா்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.