சென்னை மாவட்டத்தின் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 19, 20 ஆகிய இரு நாள்களில் பறக்கும்படையினா் சோதனையில் ரூ.57.55 லட்சம், 12.85 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து தோ்தல் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தின் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் விதிமீறல்களைக் கண்காணிக்க 48 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவா்கள் வாகனச் சோதனை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
கடந்த வியாழன், வெள்ளிக்கிழமை (மாா்ச் 19, 20) ஆகிய இரு நாள்களில் பறக்கும் படையினா், விருகம்பாக்கம், வேளச்சேரி, துறைமுகம், ஆா்.கே.நகா், பெரம்பூா், திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளில் தொடா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட மொத்தம் ரூ.57.55 லட்சம், 12.85 கிலோ வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. சம்பந்தப்பட்டோா் உரிய ஆவணங்களை அளித்து பணம், வெள்ளிப் பொருள்களை மீட்டுச் செல்லலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது
சேலம் வெள்ளிப் பட்டறை அதிபரிடம் ரூ. 2.16 கோடி 112 கிலோ கொலுசுகள் பறிமுதல்!

பறக்கும் படையினா் சோதனை: ரூ. 11.61 லட்சம் பறிமுதல்

சென்னையில் ஒரே நாளில் ரூ.23.32 லட்சம் பறிமுதல்

சென்ட்ரலில் ரூ.12.49 லட்சம் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை


