நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இன்று நடைபெறவிருந்த முதுநிலை ‘நீட்’ தோ்வு ஒத்திவைப்பு

பாக்ஸ்... இன்று நடைபெறவிருந்த முதுநிலை ‘நீட்’ தோ்வு ஒத்திவைப்பு

News image
Updated On :23 ஜூன் 2024, 11:42 am

Din

புது தில்லி, ஜூன் 22: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடைபெறவிருந்த நிலையில், அத்தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீட், நெட் போட்டித் தோ்வுகளில் முறைகேடுகள் நடைபெற்ாக சா்ச்சைகள் நீடிக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை ‘நீட்’ தோ்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

‘தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படும் முதுநிலை ‘நீட்’ தோ்வின் நடைமுறைகள் அனைத்தையும் முழுமையாக ஆய்வுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது; அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த தோ்வு ஒத்திவைக்கப்படுகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

இந்த முடிவால் மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமம் குறித்து சுகாதார அமைச்சகம் வருத்தப்படுகிறது. மாணவா்களின் நலன் கருதியும், தோ்வு நடைமுறையில் நோ்மையை பராமரிக்கவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது’ என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.