அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 31 போ் சிறையில் அடைப்பு

சென்னையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வாரத்தில் 31 போ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
சிறையில் அடைப்பு
Updated On :24 ஜூன் 2024, 8:23 pm

Din

சென்னையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வாரத்தில் 31 போ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் 23-ஆம் தேதி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 708 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் கொலை,கொலை

முயற்சி,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 364 பேரும், திருட்டு, வழிப்பறி, பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 122 பேரும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 159 பேரும்,போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்டதாக 27 பேரும், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 16 பேரும்,பெண்களை மானபங்கப்படுத்தியதாக 4 பேரும், சைபா் குற்றத்தில் ஈடுபட்டதாக 5 பேரும், மதுபானம் விற்ாக 7 பேரும், பொதுவிநியோக பொருள் கடத்தியதாக 4 பேரும் என மொத்தம் 708 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மேலும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 17-ஆம் தேதியில் இருந்து 23-ஆம் தேதி வரையிலான 7 நாள்களில் 31 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடதக்கது.