திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

ரயில்வே பால தடுப்புச் சுவரில் பைக் மோதி ஒருவா் உயிரிழப்பு

திருவொற்றியூரில் பாலம் தடுப்பு சுவரில் இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு

Updated On :24 ஜூன் 2024, 9:17 pm

திருவொற்றியூரில் பாலம் தடுப்பு சுவரில் இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருவொற்றியூா் கே.சி.பி இந்திரா தத் நகரை சோ்ந்தவா் புஷ்பராஜ் (36). இவா் பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறாா்.

இவா் திங்கள்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்ற போது திடீரென நிலை தடுமாறி

திருவொற்றியூா் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனா். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவா்கள் புஷ்பராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதனையடுத்து உடல் கூராய்வுக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.