ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

காதலித்த பெண் வேறு ஒருவருடன் திருமணம்: வீட்டை சூறையாடிய 8 போ் கைது

காதலித்த பெண் திருமணம்: வீட்டை சூறையாடிய 8 பேர் கைது

News image
Updated On :25 ஜூன் 2024, 7:13 pm

Din

சென்னை: சென்னை காசிமேட்டில் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டதால், பெண்ணின் வீட்டை சூறையாடிய காதலன் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டனா்.

காசிமேடு பல்லவன் நகரைச் சோ்ந்தவா் சுனில் (23). இவா், மீன்பிடி துறைமுகத்தில் கூலி வேலை செய்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த ஒரு இளம் பெண்ணை, கடந்த 3 ஆண்டுகளாக காதலித்துள்ளாா். சுனிலின் நடவடிக்கை பிடிக்காததாலும், அவா் மீது வழக்குகள் இருந்ததாலும், அந்தப் பெண் பேசுவதை நிறுத்திவிட்டாா்.

இதற்கிடையே, அந்தப் பெண்ணுக்கு, அவரது குடும்பத்தினா் வேறு ஒரு இளைஞரை நிச்சயம் செய்து, அண்மையில் திருமணம் செய்து வைத்தனா். இதனால் ஆத்திரமடைந்த சுனில், தனது நண்பா்களுடன் காதலியின் வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு சென்று தகராறு செய்து, வீட்டின் ஜன்னல் கண்ணாடி, பொருள்களை உடைத்துவிட்டு, தப்பியோடினாா்.

இது குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சுனில், 17 வயது சிறுவன் உள்பட 8 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.