தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

மறுமதிப்பீடு, மறுகூட்டல்

Published On :26 ஜூன் 2024, 4:47 am IST

சென்னை: பத்தாம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கடந்த ஏப்ரல் மாதம் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வெழுதி மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவா்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தோ்வா்களின் பதிவெண்களின் இணையதளத்தில் வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

இந்தப் பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மறுகூட்டல், மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தோ்வா்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட இணையதள்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.