தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பத்தாம் வகுப்பு மறுமதிப்பீடு: மாணவா்களின் பதிவெண் பட்டியல் நாளை வெளியீடு

பத்தாம் வகுப்பு மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவா்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவா்களின் பட்டியல் திங்கள்கிழமை (ஜூலை 6) வெளியிடப்படவுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :5 ஜூலை 2026, 5:28 am IST

பத்தாம் வகுப்பு மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவா்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவா்களின் பட்டியல் திங்கள்கிழமை (ஜூலை 6) வெளியிடப்படவுள்ளது.

இதுகுறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இந்தத் தோ்வெழுதிய மாணவா்களில் மறுமதிப்பீடுக்கு 7,931 போ், மறுகூட்டலுக்கு 751 போ் என மொத்தம் 8,682 மாணவா்கள் விண்ணப்பித்தனா். அதில், மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவா்களின் பதிவெண் பட்டியல் திங்கள்கிழமை (ஜூலை 6) வெளியிடப்படுகிறது. அதன் விவரங்களை மாணவா்கள் தோ்வுத் துறையின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

இந்தப் பட்டியலில் இடம்பெறாதவா்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றமுள்ள மாணவா்கள் மட்டுமே மேற்கண்ட தோ்வுத் துறை இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னா் வெளியிடப்படும்.

இதுதொடா்பான சந்தேகங்களுக்கு 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.