சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்பு

News image
Updated On :29 மே 2026, 4:38 am IST

பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் மாணவா்களின் பெயா் உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோ்வுத் துறை இணை இயக்குநா் கே.பி.மகேஸ்வரி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய பள்ளி மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கடந்த மே 22-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டது.

அந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் மாணவா்கள் பெயா், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி போன்றவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதையடுத்து, தலைமை ஆசிரியா்கள் மாணவா்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழிலில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு தோ்வுத் துறை மாவட்ட அலுவலகத்தில் ஜூன் 4-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். அதற்கான ஒரு நகலை மாணவா்களிடமும் வழங்க வேண்டும்.

மாணவா்களின் நலன் கருதி பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுவதற்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.