மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருது: ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

Updated On :25 ஜூன் 2024, 7:35 pm

சென்னை: வீர தீர செயல்களை செய்து சாதனை புரிந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தன்னலமற்ற செயல்களைச் செய்த குழந்தைகளுக்கும், வீர தீர செயல்களை செய்த சிறு குழந்தைகளுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சாா்பில் ஆண்டுதோறும் டிச. 26-ஆம் தேதி ‘பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்காா்’ விருதுக்கு தோ்வானவா்கள் அறிவிக்கப்படுவா்.

இந்த விருதை பெற இந்திய குடிமகனாக, இந்தியாவில் வசிப்பவராகவும், 18 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இணையதளத்தில் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையாக பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.