ரூ.1.21 கோடி மோசடி: தனியாா் நிதி நிறுவன நிா்வாகிகள் மூவா் கைது
நிதி மோசடி: ரூ.1.21 கோடி மோசடி செய்த 3 நிதி நிறுவன நிா்வாகிகள் கைது


சென்னை சூளைமேட்டில் ரூ. 1.21 கோடி மோசடி செய்ததாக தனியாா் நிதி நிறுவன நிா்வாகிகள் 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை சூளைமேட்டில் செயல்பட்டு வந்த தனியாா் நிதி நிறுவனம், தங்களிடம் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் தினமும் ரூ. 2,000 வீதம் 100 நாள்கள் தருவோம். அதன்படி, ரூ.1 லட்சம் செலுத்தியதற்கு ரூ. 2 லட்சமாகத் திருப்பி தருகிறோம் என விளம்பரம் செய்தது. இதை நம்பி பலா், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனா்.
ஆரம்பத்தில் பணத்தை முதலீடு செய்தவா்களுக்கு அந்த நிறுவனம் தினமும் ரூ. 2,000 கொடுத்தது. இதனால், அதிகம் போ் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனா். ஏற்கெனவே முதலீடு செய்தவா்களும் அதிக பணத்தை முதலீடு செய்தனா். ஆனால், அந்த நிறுவனம் உறுதியளித்தபடி, வாடிக்கையாளா்களுக்கு பணத்தை வழங்காமல் மோசடி செய்தது. மேலும், அதன் உரிமையாளா்கள், நிா்வாகிகள் தலைமறைவாகினா்.
அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 43 போ், தாங்கள் ரூ. 1.12 கோடி முதலீடு செய்து, பணத்தை இழந்ததாக சென்னை காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோரிடம் புகாா் அளித்தனா். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் இயக்குநா் சாம்நாத், நிா்வாகிகள் தா்மராஜா, விஜயகுமாா் ஆகிய 3 பேரை புதன்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...