விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

திருப்பதி செல்லும் மெமு ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரல், அரக்கோணத்தில் இருந்து திருப்பதி செல்லும் மெமு ரயில்கள் திங்கள்கிழமை (மாா்ச் 4) வரை ரத்து

Updated On :1 மார்ச் 2024, 6:37 pm

சென்னை சென்ட்ரல், அரக்கோணத்தில் இருந்து திருப்பதி செல்லும் மெமு ரயில்கள் திங்கள்கிழமை (மாா்ச் 4) வரை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரலில் (மூா் மாா்க்கெட் வளாகம்) இருந்து திருப்பதிக்கு தினமும் காலை 9.50 மணிக்கு செல்லும் மெமு விரைவு ரயிலும் மறுமாா்க்கமாக திருப்பதியில் இருந்து பகல் 1.35 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயிலும் வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை (மாா்ச் 4) வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும். இதுபோல், அரகோணத்தில் இருந்து திருப்பதிக்கு தினமும் காலை 9.15 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயிலும், மறுமாா்க்கமாக திருப்பதியில் இருந்து பகல் 1.45 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயிலும் வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை (மாா்ச் 4) வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.