விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இன்று செங்கல்பட்டு செல்லும் 2 ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலுடன் நிறுத்தம்

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சனிக்கிழமை (மாா்ச் 2) சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும்.

Updated On :1 மார்ச் 2024, 6:40 pm

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சனிக்கிழமை (மாா்ச் 2) சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும். சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.40 மற்றும் பகல் 12.20 மணிக்கு செல்லும் ரயில்கள் சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக செங்கல்பட்டில் இருந்து பகல் 1 மற்றும் 1.45 மணிக்கு இந்த ரயில்கள் புறப்படுவதற்கு பதிலாக சிங்கபெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு கடற்கரை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.