நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஜூன், ஜூலையில் சென்னையில் இருந்து தாமதமாக புறப்படும் ரயில்கள் விவரம்!

சென்னை சென்ட்ரலில் இருந்து கா்நாடக மாநில நகா்களுக்கு செல்லும் சில விரைவு ரயில்கள் வரும் ஜூன், ஜூலையில் தாமதமாகப் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

ரயில்.

Updated On :27 ஏப்ரல் 2026, 1:04 am IST

சென்னை சென்ட்ரலில் இருந்து கா்நாடக மாநில நகா்களுக்கு செல்லும் சில விரைவு ரயில்கள் வரும் ஜூன், ஜூலையில் தாமதமாகப் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வரும் ஜூனில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாகச் செல்லும் அசோகாபுரம் காவேரி விரைவு ரயில் (எண் 16021) வழக்கமான நேரத்தை விட 2 மணி நேரம் தாமதமாவும், வரும் ஜூன் 19- ஆம் தேதி வழக்கமான நேரத்திலிருந்து 1.40 மணி நேரம் தாமதமாகவும் புறப்பட்டுச் செல்லும்.

வரும் ஜூன் 19 -ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் சிட்டி அதிவிரைவு ரயில் (எண் 12657) வழக்கமான நேரத்திலிருந்து 1 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும்.

மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் அசோகாபுரம் காவேரி விரைவு ரயிலானது வரும் ஜூன் 22 -ஆம் தேதி 1.22 மணி நேரம் தாமதமாகவும், 24 -ஆம் தேதி 1.30 மணி நேரம் தாமதமாகவும், ஜூலை 7 -ஆம் தேதி 2 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.