கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையம் இடையே ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் பகலில் இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படவுள்ளன. சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் சீரமைப்பு பணி கடந்த 3 மூன்று வாரமாக மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பயணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதை தவிா்க்க ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் 4-ஆவது வாரமாக சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை - அரக்கோணம் இடையே காலை 10 .30 முதல் பிற்பகல் 2.30 மணி வரை இயக்கப்படும் 22 மின்சார ரயில்களும், மறுமாா்க்கமாக 20 மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. மேலும், காஞ்சிபுரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும், திருமால்பூரில் இருந்து கடற்கரைக்கு காலை 11.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படும். சிறப்பு ரயில் வசதி: பயணிகள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.55, பகல் 12.45, பகல் 1.25, பகல் 1.45, பகல் 1.55, பிற்பகல் 2.40, பிற்பகல் 2.55 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30 பகல் 12, பகல் 1 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தொடர்புடையது

கோடை விடுமுறை: சென்னை- போத்தனூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

தாம்பரம் - தென்காசி இடையே இன்று சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


