சென்னை
இன்று குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம்
சென்னை குடிநீா் வாரியம் சாா்பில், மாதம்தோறும் 2-ஆவது சனிக்கிழமையில் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை குடிநீா் வாரியம் சாா்பில், மாதம்தோறும் 2-ஆவது சனிக்கிழமையில் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சனிக்கிழமை (மாா்ச் 9) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குடிநீா் வாரிய 15 பகுதி அலுவலகங்களில் குறைதீா் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய 15 பகுதி அலுவலகங்களில் இந்த கூட்டங்கள் நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு குடிநீா், கழிவுநீா் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், குடிநீா், கழிவுநீா் வரி, கட்டணங்கள் தொடா்பான சந்தேகங்களைத் தெரிவிக்கலாம் என்று சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.
