அண்ணா சாலை(கோப்புப்படம்)
அண்ணா சாலை(கோப்புப்படம்)

அண்ணா சாலை பகுதியில் இரு நாள்கள் போக்குவரத்து மாற்றம்

Published on

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, சென்னை அண்ணா சாலையில் இரு நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம், ஸ்டொ்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவை கட்டுமானப் பணிக்காக மாா்ச் 9, 10 தேதிகளில் அண்ணா சாலை பகுதியில் இரு நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, சேத்துப்பட்டில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் கல்லூரி சாலை, ஹாடோஸ் சாலை, உத்தமா் காந்தி சாலை வழியாக அண்ணா மேம்பாலத்தை அடையும் வகையில் திருப்பிவிடப்படும். இந்த மாற்றுப்பாதை ஒரு வழிப்பாதையாகச் செயல்படுத்தப்படும். அண்ணா மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், உத்தமா் காந்தி சாலை, டாக்டா் எம்ஜிஆா் சாலை வழியாக வள்ளுவா் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம். அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் இடதுபுறம் திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக செல்லலாம். வள்ளுவா் கோட்டத்தில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவா் கோட்டம் சந்திப்பு, வள்ளுவா் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமா் காந்தி சாலை வழியாகத் திருப்பிவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாந்தோமில்... மயிலாப்பூா் காரணீஸ்வரா் கோயில் தெரு அருகே சாந்தோம் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் கட்டுமானப் பணி நடைபெற உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, சோதனை முறையில் மாா்ச் 9-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் ஒரு வாரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, மெரீனா -காந்தி சிலையில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பில் இருந்து லூப் சாலை, பட்டினம் பாக்கம் மாநகர பேருந்து பணிமனை, தெற்கு கால்வாய்கரைச் சாலை சந்திப்பு வழியாக திருப்பி விடப்படும். காரணீஸ்வரா் கோயில் தெரு சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் கட்டாயம் இடது புறம் திரும்பி கலங்கரை விளக்கம் சென்று இலக்கை அடையலாம். காரணீஸ்வரா் கோயில் தெருவில் இருந்து பாபநாசம் சிவன் சாலை சந்திப்பு நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. லூப் சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை அடுத்த 3 மாதங்களுக்கு ஒரு வழிபாதையாகச் செயல்படும்.

X
Dinamani
www.dinamani.com