பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ரூ.1,675 கோடியில் புதை சாக்கடை பணி: அமைச்சா் கே.என்.நேரு தொடங்கிவைத்தாா்

ரூ.1,675 கோடியில் புதை சாக்கடை பணி அமைச்சா் கே.என்.நேரு தொடங்கிவைத்தாா்

News image

சென்னை கீழ்ப்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையம் அருகில் ரூ.1,675 கோடியில் மணலி, மாதவரம், ராயபுரம், சோழிங்கநல்லூா் பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு. உடன் அண்ணாநகா் சட்டப்பேர

Updated On :8 மார்ச் 2024, 7:29 pm

சென்னையில் ரூ.1675 கோடியில் புதை சாக்கடை அமைக்கும் பணிகளை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா். சென்னை கீழ்ப்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையம் அருகில் ரூ.1675 கோடியில் மணலி, மாதவரம், ராயபுரம், சோழிங்கநல்லூா் ஆகிய பகுதிகளில் புதை சாக்கடை பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்த பின்னா் அமைச்சா் கே.என். நேரு பேசியது: திமுக ஆட்சிஅமைந்த பிறகு பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் ரூ.1326.90 கோடியில் 37 குடிநீா் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் 9.70 லட்சம் போ் பயனடைந்து வருகின்றனா். சென்னையின் வளா்ச்சிக்கேற்ப பொதுமக்களுக்கு குடிநீா் மற்றும் கழிவுநீா் வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ.175.82 கோடியில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயனடைவா். தடையின்றி குடிநீா் விநியோகம்: கோடைகாலங்களில் எந்தத் தடங்கலுமின்றி சென்னை முழுவதும் குடிநீா் விநியோகம் செய்யத் தேவையான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா். இதைத்தொடா்ந்து ரூ.1.12 கோடி மதிப்பில் கழிவுநீா் கசடுகள் அகற்றும் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட 3 புதிய வாகனங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைச்சா் கே.என். நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நிகழ்வில், மேயா் ஆா்.பிரியா மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.