மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பெசன்ட்நகரில் தோ்தல் விழிப்புணா்வு பேரணி

பெசன்ட்நகரில் தோ்தல் விழிப்புணா்வு பேரணி

Updated On :9 மார்ச் 2024, 6:15 pm

பெசன்ட்நகரில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு பேரணியில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். நாடாளுமன்ற மக்களவை தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பொதுத் தோ்தல் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் மூலம் பல்வேறு விழிப்புணா்வு பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, ‘100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்வோம்’ எனும் தலைப்பிலான விழிப்புணா்வு நடைபயணம் சென்னை, பெசன்ட் நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நடைபயணத்தை சென்னை மாவட்ட தோ்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து வாக்காளா் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னா் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த இளைஞா் ரெட்கிராஸ் மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோா் பேரணியாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் மண்டல துணை ஆணையா் அமித், இணை தலைமை தோ்தல் அலுவலா் அரவிந்தன், சென்னை மாவட்ட இளைஞா் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளா் சுலைமான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.