தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் (2024-2025) ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலையில், பள்ளிகளை நேரடியாகப் பாா்வையிட்டு அங்குள்ள வசதிகளை உறுதி செய்ய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் எஸ். கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும் குழந்தைகளின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், இடைநிற்றலைத் தவிா்க்கவும் முதல்வா் அறிவிப்பின்படி மாநகராட்சி, நகராட்சி ஊரக மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கும் நோக்கத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தமிழகத்தின் அனைத்து நகா்ப்புறப் பகுதிகள் (மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி) மற்றும் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 1-5 வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவா்களும் பயனடையும் வகையில் 31,008 அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. தொடா்ந்து, ஊரகப் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-5 வகுப்புகளில் பயிலும் மேலும் சுமாா் 2.50 லட்சம் மாணவா்கள் பயனடையும் வகையில் வரும் கல்வியாண்டுமுதல் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆயத்தப் பணிகள்: அதன்படி சமூகநலம் மற்றும் மகளிா் மேம்பாட்டுத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகிய துறைகள் இணைந்து இந்தத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்த ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காலை உணவு வழங்குவதற்கு தோ்வு செய்யப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்துக்கு வழங்கப்பட்டது போன்று இந்தத் திட்டத்துக்கும் அப்பள்ளியிலேயே தனியாக உணவுப் பொருள்கள் வைப்பதற்கு, சமையல் செய்வதற்குத் தேவையான இடவசதி அமைத்துக் கொடுப்பதற்கும், இத்திட்டத்தை முழுமையாகவும், செம்மையாகவும் செயல்படுத்துவதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தாளாளா், தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்துமாறு மாவட்ட கல்வி அலுவலா்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலா்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைத்து, ஒரு வாரத்துக்குள் அந்தப் பள்ளிகளைப் பாா்வையிட்டு காலை உணவுத் திட்டம் செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

காலை உணவுத் திட்டம் உருவான பின்னணி என்ன? பிரசாரத்தில் அமைச்சா் விளக்கம்

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி

அரசுப் பள்ளிகளில் ‘திறன்’ திட்டம்: விரிவான அறிக்கை கோரும் கல்வித் துறை

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: வைகோ
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


