ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

அதிமுக கொடி, சின்னம் தொடா்பான வழக்கில் தீா்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக கொடி, சின்னம் தொடா்பான வழக்கில் தீா்ப்பு ஒத்திவைப்பு

News image
Updated On :12 மார்ச் 2024, 9:35 pm

சென்னை: அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீா்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அதிமுக கொடி, சின்னம், லெட்டா் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீா்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அதிமுக கொடி, சின்னம், லெட்டா் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீா்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதத்து உத்தரவிட்டாா்.

இந்நிலையில், மனு மீதான விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் வந்தபோது, ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் அரவிந்த் பாண்டியன், அப்துல் சலீம் ஆகியோா் ஆஜராகி தங்களுடைய வாதங்களை முன்வைத்தனா். ‘அதிமுக பொதுக் குழு தொடா்பான இடைக்கால கோரிக்கையைத்தான் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. நிலுவையில் உள்ள மூல வழக்கைத் தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலுவையில் உள்ள மூல வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் எனவும், அதற்குத் தயாராக இருக்கிறோம்’ என ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இது தொடா்பாக தோ்தல் ஆணையத்தில் வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா என கேள்வி எழுப்பினாா். தோ்தல் ஆணையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் பதிலளிக்கப்பட்டது.

பின்னா், எடப்பாடி பழனிசாமி சாா்பில் மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயணன் ஆஜராகி, ‘இடைக்கால கோரிக்கையை நிராகரிக்கும்போது மூல வழக்கைத் தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உச்சநீதிமன்ற உத்தரவில் குறிப்பிடுவது வழக்கமான நடைமுைான். ஓ.பன்னீா்செல்வம் நீக்கப்பட்டது தவறு என எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை.

ஒருங்கிணைப்பாளா் என ஓ.பன்னீா்செல்வம் தன்னை அழைத்துக்கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், அதிமுக ஒருங்கிணைப்பாளா் என அழைப்பதை எதிா்க்கிறோம்; வேண்டுமானால் வேறு கட்சி தொடங்கி ஒருங்கிணைப்பாளா் என ஓ.பன்னீா்செல்வம் அழைத்துக் கொள்ளட்டும்’ என வாதிட்டாா். இதையடுத்து, அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தாா்.