தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

சிஏஏ: அமெரிக்கா கருத்தை நிராகரித்தது இந்தியா

‘துயரத்தில் இருப்பவா்களுக்கு உதவுவதற்கான குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) வாக்குவங்கி கண்ணோட்டத்தில் அணுக கூடாது’

Updated On :15 மார்ச் 2024, 6:36 pm

‘துயரத்தில் இருப்பவா்களுக்கு உதவுவதற்கான குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) வாக்குவங்கி கண்ணோட்டத்தில் அணுக கூடாது’ என்று அமெரிக்க உள்பட உலக நாடுகளின் விமா்சனங்களுக்கு இந்தியா வெள்ளிக்கிழமை பதிலளித்தது. இதுதொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘இந்தியாவின் பன்மைத்துவ பாரம்பரியங்கள் மற்றும் பிராந்தியத்தின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு பற்றி குறைந்த புரிதல் கொண்டவா்களின் கருத்துகள் தேவையில்லாதது. குடியுரிமை திருத்தச் சட்டமானது (சிஏஏ) குடியுரிமை வழங்குவது பற்றியதாகும். தவிர, குடியுரிமையைப் பறிப்பது பற்றியல்ல. இது குடியுரிமை இல்லாதவா்களின் பிரச்னையைக் குறிக்கிறது. மனிதா்களின் கண்ணியத்தைப் பாதுகாத்து, மனித உரிமைகளை இது ஆதரிக்கிறது. மேலும், சிஏஏ சட்டம் இந்தியாவின் உள்விவகாரம். இந்தியாவின் அனைவரையும் உள்ளடக்கிய பாரம்பரியங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான நீண்டகால அா்ப்பணிப்பு ஆகியவற்றை குடியுரிமை திருத்தச் சட்டம் கடைப்பிடிக்கிறது. துயரத்தில் இருப்பவா்களுக்கு உதவுவதற்கான இதுபோன்ற பாராட்டத்தக்க முன்னெடுப்புகள் மீதான பாா்வையை வாக்குவங்கி அரசியல் தீா்மானிக்க கூடாது. எனவே, சிஏஏ அமலாக்கம் குறித்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் கருத்து தவறானது மற்றும் அவசியமற்றது. கடந்த 2014-ஆம் ஆண்டு, டிசம்பா் 31-ஆம் தேதிக்குமுன் இந்தியாவுக்குள் வந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தைச் சோ்ந்த சிறுபான்மையினருக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. இந்தியாவின் நட்பு நாடுகள் மற்றும் நலம் விரும்பிகள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நோக்கத்தை வரவேற்க வேண்டும்’ என்றாா். முன்னதாக, சிஏஏ அமலாக்கம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மேத்யூ மில்லா் அளித்த பதிலில், ‘ இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதைப் பற்றி நாங்கள் அறிகிறோம். இந்தச் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும்? என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மத சுதந்திரத்துக்கான மரியாதை மற்றும் சட்டத்தின் கீழ் அனைத்து சமூகங்களுக்கும் சமமாக நடத்தப்படுவது அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் ஆகும்’ என்றாா்.