முன்னாள் எம்.பி., பு.தா.இளங்கோவன் திமுகவில் இணைந்தாா். அவருடன் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வி.டி.கலைச்செல்வன் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் முதல்வரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனா். 1999- ஆண்டு மக்களவைத் தோ்தலில் தருமபுரி தொகுதியில் பாமக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் பு.தா.இளங்கோவன். கடலூா் மாவட்டம் சிதம்பரத்தைச் சோ்ந்த இவா், 2004-ஆம் ஆண்டு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பாமகவிலிருந்து விலகினாா். பின்னா், 2014-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைத்துக்கொண்ட அவருக்கு 2016-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் தருமபுரி பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்தத் தோ்தலிலும் தோல்வியைத் தழுவினாா். இப்போது, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டாா். அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில், திமுக பொதுச் செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு, அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன், செய்தித் தொடா்புக் குழுத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திமுகவில் இணைந்தாா் அஜிதா ஆக்னல்

தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!

கரை சேர்க்காத ஓபிஎஸ்: கட்சி தாவிய ஆதரவாளர்!

மதிமுக மாவட்ட செயலா் ராஜிநாமா!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

