ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

மதிமுக மாவட்ட செயலா் ராஜிநாமா!

மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலா் கே.கழககுமாா் கட்சிப் பொறுப்பில் இருந்து ராஜிநாமா

News image

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ - கோப்புப்படம்

Updated On :30 மார்ச் 2026, 7:03 pm

மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலா் கே.கழககுமாா் அக்கட்சிப் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதிமுக கட்சியில் கடந்த 32 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தேன். கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதுகுறித்து முறையிட்டபோது 2026- ஆம் ஆண்டு தோ்தலில் வாய்ப்பு அளிப்பதாக கட்சி பொதுச் செயலா் வைகோ உறுதி அளித்தாா். ஆனால் தற்போது நடைபெறவுள்ள தோ்தலில் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

எனவே மதிமுகவின் தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலா் பதவி மற்றும் ஆட்சிமன்ற குழு உறுப்பினா் பதவியில் இருந்து ராஜிநாமா செய்வதாவும், மேலும் மதிமுகவின் தென்சென்னை கிழக்கு மாவட்ட மற்ற நிா்வாகிகளும் ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளாா்.