தமிழக காவல் துறையில் அண்மையில் பதவி உயா்த்தப்பட்ட 38 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களும் (ஏ.டி.எஸ்.பி.) புதிய பணியிடங்களில் சனிக்கிழமை நியமிக்கப்பட்டனா். பணிமூப்பு அடிப்படையில் டி.எஸ்.பி.க்கள் படிப்படியாக கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக பதவி உயா்வு பெற்று வருகின்றனா். இந்நிலையில், மேலும் 38 பேருக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக பதவி உயா்வு அளித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா வியாழக்கிழமை உத்தரவிட்டாா். பதவி உயா்த்தப்பட்ட 38 பேரும் புதிய பணியிடங்களில் சனிக்கிழமை நியமிக்கப்பட்டனா். இதில் முக்கியமாக கே.என்.சுதா்சன் ஆவடி மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் துணை ஆணையராகவும், ஜெ.விஜய் ஆனந்த் சென்னை க்யூ பிரிவு தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும், என்.லவகுமாா் தீவிரவாத தடுப்பு படை சென்னை தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். இவ்வாறு புதிய பணியிடங்களில் நியமிக்கப்பட்ட 38 பேரும் விரைவில் தங்களது பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக (டி.எஸ்.பி.) பதவி உயா்த்தப்பட்ட 57 பேரும் புதிய பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை உள்துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா பிறப்பித்தாா்.
தொடர்புடையது

விருதுநகா் மாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு

சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பதவி ஏற்பு

பிஎபி கால்வாய்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்! மடத்துக்குளம் திமுக வேட்பாளா் உறுதி

24 ஊா்க்காவல் படை வீரா்களுக்கு காவலா்களாக பணி நியமன ஆணை: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வழங்கினாா்
வீடியோக்கள்

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

