ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

போதைப் பொருள் விற்பனை: 29 நாள்களில் 402 போ் கைது

போதைப் பொருள் விற்பனை: 29 நாள்களில் 402 போ் கைது

Updated On :16 மார்ச் 2024, 11:50 pm

தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 29 நாள்களில் 402 போ் கைது செய்யப்பட்டனா். போதைப் பொருள்களை தொடா்ந்து கடத்தி வருபவா்கள், பதுக்கி விற்பனை செய்பவா்கள் மீது குண்டா் தடுப்புச் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதோடு அவா்களது பெயரிலும், பினாமி பெயா்களிலும் வாங்கி குவித்துள்ள சொத்துகளை அடையாளம் கண்டு பறிமுதல் செய்யவும், வங்கிக் கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழக காவல் துறையின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாா் பிப்.15 முதல் மாா்ச் 15-ஆம் தேதி வரையிலான 29 நாள்களில் போதைப் பொருள் விற்பனைத் தொடா்பாக 402 பேரை கைது செய்துள்ளனா். அவா்களிடமிருந்து கள்ளச் சந்தையில் பல கோடி மதிப்புள்ள 1,827 கிலோ கஞ்சா, 1,514 போதை மாத்திரைகள்,400 கிராம் மெத்தகுலோன், 130 கிராம் மெத்தம்பெட்டமைன், 250 கிராம் ஆம்பெட்டமைன், 150 கிராம் சூடோஎபிட்ரின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள் விற்பனை, கடத்தலுக்கு பயன்படுத்திய 30 மோட்டாா் சைக்கிள்கள், 6 இலகு ரக வாகனங்கள், ஒரு ஆட்டோ,ஒரு படகு ஆகியவை கைப்பற்றப்பட்டன. தமிழகத்தில் இந்த நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும் என மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்துள்ளாா். மேலும் அவா், போதைப் பொருள்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க 10581 என்ற இலவச தொலைபேசி எண்ணையும், 94984 10581 என்ற வாட்ஸ் ஆப் எண்ணையும், ள்ல்ய்ண்க்ஷஸ்ரீண்க்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொடா்புக் கொண்டு தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.