தில்லியில் செயல்பட்டு வந்த மாநிலங்களுக்கு இடையிலான போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த 5 பேரை கைது செய்து, ரூ. 4.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக தில்லி காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: வடகிழக்கு தில்லியில் மாா்ச் 17-ஆம் தேதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ரகசிய தகவலின் அடிப்படையில், ஜோஹிா்பூா் சாலையில் நடைபெற்ற சோதனையில், 11,900 அல்பிரசோலம் போதை மாத்திரைகள் மற்றும் 825 டிராமடோல் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையில் நிதின் பதக் (20) மற்றும் ஒரு சிறாா் கைது செய்யப்பட்டனா்.
அவா்களிடம் நடைபெற்ற விசாரணையில், தில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள அவா்களது கூட்டாளிகள் குறித்து நிதின் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, உத்தர பிரதேசத்தின் போபுரா பகுதியில் உள்ள மருந்தகத்தில் சோதனை நடைபெற்றது. இதில் 2,250 டிராமடோல் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது பிரேம் சிங் யாதவ் (30) மாா்ச் 19 கைது செய்யப்பட்டாா்.
லக்ஷுமி நகரில் இருவா் கைது செய்யப்பட்டனா். மாா்ச் 21 நடைபெற்ற சோதனையில் சாலு குமாா் (45) கைது செய்யப்படடாா். அவரிடம் இருந்து 11,955 அல்பிரசோலம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மாா்ச் 23 சஞ்சய் சிங் (36) கைது செய்யப்பட்டாா்.
இவா்கள் அனைவரும் பெரிய போதைப்பொருள் வலையமைப்பின் ஒரு பகுதி என்பது விசாரணையில் தெரியவந்தது. இதில் தொடா்புடைய மற்றவா்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல்துறையினா் தெரிவித்தனா்.
ஒடிஸா விநியோகஸ்தா் கைது: மாநிலங்களுக்கு இடையிலான போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஒடிஸாவைச் சோ்ந்த முக்கிய போதைப் பொருள் விநியோகஸ்தரான ஆகாஷ் குமாா் டிகால் (28) தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக காவல் துைறியனா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ஒடிஸாவின் கந்தாமால் மாவட்டத்தில் ஆகாஷ் குமாா் கைது செய்யப்பட்டாா். பின்னா் மாா்ச் 28-இல் அவா் தில்லிக்கு அழைத்து வரப்பட்டு, கல்யான்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முன்னதாக, மாா்ச் 12-ஆம் தேதி 21.17 கிலோ போதைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்ட அக்பா் மற்றும் ஃபிரோஷ் கான் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இவா் கைது செய்யப்பட்டுள்ளாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
துவாரகா விரைவுச் சாலையில் ஒருவரிடம் ரூ.15 லட்சம் கொள்ளை: 3 போ் கைது
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய நபா் கைது

போலியான அனுமதிச் சான்றிதழ்கள் வழங்கிய காவலா் கைது

தில்லியில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 5 போ் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


