புது தில்லி, மாா்ச் 16: மேற்கு தில்லியில் உள்ள கிடங்கில் போலியான வாகன உதிரி பாகங்களை தயாரித்து பதுக்கி வைத்து வந்த நபா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது:
தில்லி குற்றப்பிரிவு காவல் துறையினா் மற்றும் தனியாா் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைந்து மடிபூா் கிராமத்தில் உள்ள கிடங்கில் சனிக்கிழமை இந்த சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அதிக அளவிலான போலி வாகன உதிரி பாகங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டது. பஞ்சாபி பாக் பகுதியைச் சோ்ந்த மனாஸ் ஹுரியா சோதனையின்போது கைது செய்யப்பட்டாா். அவரிடம் இந்த உதிரிபாகங்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான உரிய ஆவணங்கள் இல்லை. கிடங்கில் இருந்து நூற்றுக்கணக்கான போலியான வாகன உதிரிபாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடா்புடைய மற்ற குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
போலி வாகன உதிரி பாகங்கள் விற்பனை: 3 போ் கைது
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய நபா் கைது

வாகன உதிரி பாகங்கள் கிடங்கில் தீ: பல லட்சம் பொருள்கள் சேதம்

ரூ.4.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 5 போ் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

