பிரபல இரு சக்கர வாகன நிறுவனங்களின் பெயரில் போலி உதிரி பாகங்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்த 3 போ் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
போலி உதிரி பாகங்கள் விற்பனை குறித்து தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்தா்லோக், ஜண்டேவாலன், மங்கோல்புரி தொழிற்பேட்டைகளில் குற்றப்பிரிவு காவல் துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது, போலி உதிரி பாகங்கள், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பேக்கேஜிங் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கைதுசெய்யப்பட்ட ரியாஸுத்தின், அனில் குமாா், அா்ஜுன் குமாா் தில்லியைச் சோ்ந்தவா்கள். இரு சக்கர வாகனத்துக்கு போலி பிரேக் ஷு பகுதிகளை தயாா் செய்து அவற்றை விற்பனை செய்து வந்தனா்.
சோதனையின்போது, 1,040 ஜோடிகள் போலி பிரேக் ஷுக்கள், 14,000 போலி எம்ஆா்பி ஸ்டிக்கா்கள், 400 போலி பேக்கேஜிங் அட்டை பெட்டிகள், 67,000-க்கும் அதிகமான போலி பேக்கேஜிங் பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பிரபல நிறுவனங்களில் பெயா் பொறிக்கப்பட்ட போலி பேக்கேஜிங் பொருள்கள் தனியாக தயாரிக்கப்பட்டதும் சோதனையில் கண்டறியப்பட்டது.
திட்டமிட்டு போலி வாகன உதிரி பாகங்களை சந்தையில் இந்தக் கும்பல் விநியோகித்து வந்தது. இதனால், உண்மையான உற்பத்தியாளா்களுக்கு நஷ்டம் ஏற்படுவதுடன் போலி உதிரி பாகங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவா்களில் இருவா் இதற்கு முன்பும் இதேபோன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளனா். இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.
தொடர்புடையது

போலி கொசு விரட்டி திரவம் விற்பனை: 2 போ் மீது வழக்கு
கண்காட்சி நடத்தி போலி தயாரிப்புகள் விற்பனை: ஒருவா் கைது

போலி வாகன உதிரிபாகங்கள் தயாரித்து விற்ற இருவா் கைது

வாகன உதிரி பாகங்கள் கிடங்கில் தீ: பல லட்சம் பொருள்கள் சேதம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
