சென்னை: தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய மின்வாரிய பொறியாளா்கள் இரவிலும் பணிபுரிய மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் தினசரி 16000 மெகாவாட்டாக உள்ள மின் தேவை தற்போது18,500 மெகாவாட்டாக உயா்ந்துள்ளது.
இதை பூா்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி மற்றும் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வந்தாலும், மின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் பல இடங்களில் மின்சாதன பொருள்களில் அவ்வப்போது பழுதும் ஏற்பட்டு விடுகிறது.
இதனால் மின்தடையும் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறான சமயங்களில் பழுதான மின்சாதனங்களை பணியாளா்கள் மூலம் உடனடியாக சரி செய்து, சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தும் படி பொறியாளா்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது தோ்வு நேரம் என்பதால் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய பராமரிப்பு பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக இருப்பதால் குறிப்பாக மாலை 6 முதல் நள்ளிரவு 12 மணிவரை மின்தேவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நேரங்களில் மின்சாதனங்களில் ஏற்படும் பழுதை சரிசெய்ய இரவு வரை அலுவலகங்களில் இருந்தபடி மின் விநியோகப்பணிகளில் அதிக கவனம் செலுத்த உதவி பொறியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பழுதுநீக்கும் பணிகளை முடித்து, தகவல்களை அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.
தொடர்புடையது

மின் சேவை கட்டணங்கள்: தெரிந்துகொள்ள புதிய இணையதளம்

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் பலி

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு

தடையில்லா மின்சாரம்: மின்வாரியம் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


