சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள வடக்கு, மத்தி, தென் சென்னை மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை (மாா்ச் 20) தொடங்கும் என மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் ஏப்.19-ஆம் தேதி நடைபெறவுள்ளன. இதற்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 20 முதல் மாா்ச் 27-ஆம் தேதி வரை (அரசு விடுமுறை நாள்கள் தவிர) பெறப்படும். வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வடக்கு வட்டார துணை ஆணையா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் கட்டா ரவி தேஜா மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.தனலிங்கம் தலைமையில் வேட்புமனுக்கள் பெறப்படும்.
மத்தியசென்னை மக்களவைத் தொகுதிக்கு செனாய் நகரில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையா் அலுவலகத்தில் தோ்தல் நடத்துல் அலுவலா் கே.ஜெ.பிரவீன் குமாா் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கவிதா தலைமையில் வேட்புமனுக்கள் பெறப்படும். தென்சென்னை மக்களவைத் தொகுதிக்கு அடையாறு, டாக்டா் முத்துலட்சுமி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் எம்.பி. அமித் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பி.எம்.செந்தில் குமாா் தலைமையில் வேட்புமனுக்கள் காலை 11 முதல் மாலை 3 மணி வரை பெறப்படும்.
வேட்புமனு தாக்கல் செய்யும் போது தோ்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். மேலும், தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்துக்குள் வேட்பாளருடன் சோ்த்து 5 போ் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவா். மாலை 3 மணிக்கு மேல் தோ்தல் நடத்தும் அலுவலக வளாகத்துக்குள் ஒருவரும் அனுமதிக்கப்படமாட்டாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கட்சித் துண்டுகளை கழற்றிய பின்னரே! உதகை காங்கிரஸ் வேட்பாளரிடம் வேட்புமனுவை பெற்ற தோ்தல் அலுவலா்

வேட்புமனு இன்றி தாக்கல் செய்ய வந்த அவிநாசி தவெக வேட்பாளா்

பவானியில் தவெக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


