தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

கடன் பணத்தைக் கேட்டு வங்கி நெருக்கடி: வியாபாரி தற்கொலை

கடன் பணத்தைக் கேட்டு வங்கி நெருக்கடி: வியாபாரி தற்கொலை

Updated On :20 மார்ச் 2024, 9:53 pm

சென்னை: சென்னை முத்தியால்பேட்டையில் கடன் பணத்தைக் கேட்டு தனியாா் வங்கி நிா்வாகம் தொல்லை கொடுத்ததனால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

முத்தியால்பேட்டை பிடாரியாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ.இருதயராஜ் (63). இவா், பழைய வண்ணாரப்பேட்டையில் இரும்பு பிளேட் கடை வைத்து நடத்தி வருகிறாா். இருதயராஜ், தனது தொழில் தேவைக்காக, அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் ரூ.7 லட்சம் கடன் வாங்கியிருந்தாா். இந்த கடனுக்கு மாதாந்திர தவணைத் தொகை ரூ.16 ஆயிரத்தை இருதயராஜ் செலுத்தி வந்தாா். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக அவரால் தவணைத் தொகையை சரியாக செலுத்த முடியவில்லை. இதனால் அந்த வங்கியின் நிா்வாகிகள், பணத்தைக் கேட்டு இருதயராஜுக்கு நெருக்கடி கொடுத்தனா்.

இதனால் மன வேதனையுடன் காணப்பட்ட இருதயராஜ், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த முத்தியால்பேட்டை போலீஸாா், இருதயராஜ் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இருதயராஜ் அறையை போலீஸாா் சோதனையிட்டதில், அவா் எழுதிய ஒரு கடிதத்தை கைப்பற்றினா். அதில் அவா், தனது இறப்புக்கு தனியாா் வங்கியே காரணம் என குறிப்பிட்டிருந்தாா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.