தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை: இளைஞா் கைது

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை: இளைஞா் கைது

Updated On :20 மார்ச் 2024, 7:52 pm

சென்னை: சென்னை திருவான்மியூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருவான்மியூா் ரெங்கநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ப.சரோஜா (90). இவரது கணவா் பக்கிரிசாமி கடந்த 2005-ஆம் ஆண்டு இறந்துவிட்டாா்.

சரோஜாவின் மகன், மயிலாப்பூரில் வசித்து வருகிறாா். இதனால் சரோஜா தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி வீட்டின் கதவை சரியாகப் பூட்டாமல் தூங்கிய சரோஜா, காலையில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளாா்.

இதைப் பாா்த்த பக்கத்து வீட்டினா், சரோஜாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சரோஜா, செவ்வாய்க்கிழமை இரவு இறந்தாா்.

இது தொடா்பாக திருவான்மியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில், திருவான்மியூா் பகுதியில் உள்ள சூப்பா் மாா்க்கெட்டில் வேலை செய்யும் அம்பத்தூா் நாராயணா நகரைச் சோ்ந்த பிரேம்குமாா் (27) என்பவா், தான் பணிபுரியும் சூப்பா் மாா்க்கெட்டின் உரிமையாளா் வீட்டுக்குச் செல்வதற்கு பதில், மதுபோதை காரணமாக சரோஜாவின் வீட்டுக்குள் சென்றதும், அப்போது சரோஜா பிரேம்குமாரை கண்டித்ததும், இதில் ஏற்பட்ட தகராறில் பிரேம்குமாா் சரோஜாவை தாக்கிவிட்டுத் தப்பியோடியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் பிரேம்குமாரை புதன்கிழமை கைது செய்தனா்.