தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

பௌா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

விழுப்புரம் பதிப்புக்கு முக்கியம்.... பௌா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

News image
Updated On :20 மார்ச் 2024, 8:00 pm

சென்னை: பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து மாா்ச் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு விரைவு ரயில் வேலூா், போளூா் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து மாா்ச் 25-ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு விரைவு ரயில் காலை 9.05 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.