வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திருவண்ணாமலைக்கு ஏப். 1-இல் சிறப்பு ரயில்

திருவண்ணாமலைக்கு ஏப். 1-இல் சிறப்பு ரயில் இயக்கம் பற்றி...

News image
Updated On :28 மார்ச் 2026, 8:27 pm

பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே வரும் ஏப். 1 புதன்கிழமை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 1- ஆம் தேதி காலை 10.10 மணிக்கு விழுப்புரத்திலிருந்து முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (எண் 06130) புறப்பட்டு காலை 11.15 மணிக்கு திருவண்ணாமலையைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் திருவண்ணாமலையிலிருந்து அன்று நண்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06129) பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரத்தைச் சென்றடையும்.

சிறப்பு ரயில்களில் 18 மெமு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் வெங்கடேசபுரம், மாம்பலப்பட்டு, அய்யாண்டூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.